Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

படவேட்டம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

ADDED : ஜூலை 19, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அய்யப்பா நகரில், தாய் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 47வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து காலை 7:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், 8:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 9:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

மாலை 6:00 மணிக்கு புதிய புயல் மாஸ்டர் கிருஷ்ணா பிரதர்ஸின் கிராமிய கலை நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு ஒய்யாளி ஆட்டமும் நடந்தது.

இரவு 7:30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிட்டு வர்ணிப்பும், மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில், கலெக்ட்ரேட், திருப்பருத்திகுன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us