/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கால்வாயில் கரை அமைக்க காவனுாரில் வேண்டுகோள் கால்வாயில் கரை அமைக்க காவனுாரில் வேண்டுகோள்
கால்வாயில் கரை அமைக்க காவனுாரில் வேண்டுகோள்
கால்வாயில் கரை அமைக்க காவனுாரில் வேண்டுகோள்
கால்வாயில் கரை அமைக்க காவனுாரில் வேண்டுகோள்
ADDED : ஜூலை 29, 2024 06:16 AM
குன்றத்துார் : சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக, செம்பரம்பாக்கம் உள்ளது. 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், நீர்மட்டம் 24 அடி உயரமும் உடையது.
மழைக்காலத்தில் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், ஏரிக்கரையில் இருந்து துவங்கும் கால்வாய் வழியே குன்றத்துார் அருகே காவனுார், திருமுடிவாக்கத்தை கடந்து திருநீர்மலையில் அடையாறு கால்வாயை அடைகிறது.
இந்த உபரிநீர் செல்லும் கால்வாயில் குன்றத்துார் அருகே காவனுாரில் ஒருபுறம் மட்டும் கரை உள்ளது.
கால்வாயில் அதிக நீர் செல்லும்போது, கரை இல்லாத வழியே காவனுார், ஆர்.வி., நகரில் உள்ள குடியிருப்பு பகுதியை சூழ்கிறது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கும் காலங்களில், இந்த பகுதி மக்கள் வேதனைக்கு உள்ளாகின்றனர். அதனால், காவனுாரில் வெள்ளம் சூழ்வதை தடுக்க, கரை அமைக்க வேண்டும் என, அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.