/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
மாதவரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
ADDED : ஜூலை 29, 2024 06:17 AM

மாதவரம், : மாதவரத்தில் உள்ள நியாஸ் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில், வெளிநாட்டு சிகரெட் பதுக்கியிருப்பதாக, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நேற்று சோதனையிட்டனர்.
அதன் கிடங்கை சோதனையிட்டதில், 470 சிகரெட் பண்டல்கள் இருந்தன. 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், மும்பையில் செயல்படும் இந்நிறுவனம், மும்பையில் இருந்து வெளிநாட்டு சிகரெட்களை லாரியில் எடுத்து வந்து, இங்குள்ள கிடங்கில் பதுக்கியது தெரிந்தது.
இது தொடர்பாக, மாதவரம் அலுவலகத்தை நிர்வகித்து வரும் கிஷன்குமார், ராதிகா ஆகிய இருவரையும், ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, மாதவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என கூறப்படும் பிஜயந்த் தோபன் பத்ரா, ஜெயபிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.