/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கட்டி முடித்தும் திறக்கப்படாத ரேஷன் கடை கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாத ரேஷன் கடை கட்டடம்
கட்டி முடித்தும் திறக்கப்படாத ரேஷன் கடை கட்டடம்
கட்டி முடித்தும் திறக்கப்படாத ரேஷன் கடை கட்டடம்
கட்டி முடித்தும் திறக்கப்படாத ரேஷன் கடை கட்டடம்
ADDED : ஜூன் 01, 2024 09:47 PM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த, கப்பான்கோட்டூர் கிராமத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு, 450க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கடையில், அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதில், சில நாட்களில் பலருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தவிர்க்க, கப்பான்கோட்டூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதுார் காங்., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் ரேஷன் கடை கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆறு மாதமாகியும், புதிய ரேஷன் கடை கட்டடம், பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என, கிராமத்தினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.