/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண் அரிப்பால் சேதமான நசரத்பேட்டை சாலை மண் அரிப்பால் சேதமான நசரத்பேட்டை சாலை
மண் அரிப்பால் சேதமான நசரத்பேட்டை சாலை
மண் அரிப்பால் சேதமான நசரத்பேட்டை சாலை
மண் அரிப்பால் சேதமான நசரத்பேட்டை சாலை
ADDED : ஜூன் 01, 2024 10:52 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 26வது வார்டு, நசரத்பேட்டை அறிஞர் அண்ணா தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இத்தெருவில் உள்ள வீடுகளின் பின்பக்கம் வழியாக பூசிவாக்கம் கால்வாய் செல்கிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, கால்வாயின் தடுப்புச்சுவர் உடைந்த பகுதி வழியாக வெளியேறிய மழைநீர், அறிஞர் அண்ணா தெரு வழியாக சென்றதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது.
இதனால், சாலை யோரம் 1 அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம்ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதோடு, பூசிவாக்கம் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.