/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 100 நாள் வேலை வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை 100 நாள் வேலை வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 05, 2024 12:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அவலுார் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தங்களுக்கு சரிவர பணி வழங்கவில்லை எனவும், 50 நாட்கள் கூட முழுமையாக பணி கிடைக்கவில்லை எனவும், குற்றஞ்சாட்டினர்.
வட்டார வளர்ச்சி அலுலர் கோமளா, கிராமத்தினரிடம் சமாதானம் செய்து, உரிய முறையில் பணி வழங்கப்படும் எனவும், மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 100 நாட்கள் முழுமையாக தங்களுக்கு பணி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
திங்கட்கிழமை முதல், தங்களுக்கு முழுமையாக, பணி வழங்காவிட்டால், சாலை மறியல் போராட்டம் செய்வோம் எனவும் எச்சரித்தனர். ஊரக வளர்ச்சித் துறையினர் கிராமத்தினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.