லாயக்கற்ற ஆரம்பாக்கம் மண் சாலைகள்
லாயக்கற்ற ஆரம்பாக்கம் மண் சாலைகள்
லாயக்கற்ற ஆரம்பாக்கம் மண் சாலைகள்
ADDED : ஜூலை 17, 2024 11:31 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஆரம்பாக்கத்தில் நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ள உட்புற சாலைகளால், அப்பகுதியினர் அவஸ்தை அடைந்து வருகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், செரப்பன்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆரம்பாக்கம் கிராமம், ஆதிபராசக்தி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான உட்புற தெருக்களில் தார் சாலை, சிமென்ட் சாலை வசதிகள் இல்லை.
மண் சாலையாகவே உள்ளதால், ஒவ்வொரு மழைக்கும் சகதியாக மாறி, நடக்கவே முடியாத நிலையில் இருந்து வருகின்றன. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் சேற்றில் நடக்க முடியாமல் சென்று வருகின்றனர்.
தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், மோசமான சாலையில் பயணிக்க முடியாமல் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.