Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புகைப்படம், ஓவிய கண்காட்சி மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

புகைப்படம், ஓவிய கண்காட்சி மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

புகைப்படம், ஓவிய கண்காட்சி மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

புகைப்படம், ஓவிய கண்காட்சி மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

ADDED : ஜூலை 17, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:தஞ்சாவூர் தமிழ் பல்கலை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், ஐந்து நாள் கல்வெட்டு பயிலரங்கம் மற்றும் தொல்லியல் கண்காட்சி துவக்க விழா கடந்த 15ம் தேதி துவங்கியது.

தொல்லியல் கண்காட்சியின் மூன்றாம் நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி பா.உ.செம்மல் கண்காட்சியை பார்வையிட்டார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரிய பொருட்களை பற்றிய விபரங்களை கேட்டறிந்தார். மேலும், கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சியை நீதிபதி பா.உ.செம்மல் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, சங்கரா கலை அறிவியல் கல்லுாரியில் செயல்படுத்தப்பட்டு வரும் திண்ணைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் தொல்லியல் கண்காட்சியையும், ஓவிய கண்காட்சியையும் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

கல்வெட்டு பயிலரங்கத்தில் நேற்று, 'அருங்காட்சியகங்கள் அத்தியாவசியம்' என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர், திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலமுருகன், 'நடு கற்களும் தெய்வ சிற்பங்களும்' என்ற தலைப்பிலும் பயிலரங்க உரையாற்றினர்.

கிரந்தம் மற்றும் வடமொழி எழுத்து குறித்து, சங்கரா கல்லுாரி சமஸ்கிருத துறை தலைவர் ஸ்ரீசைலம் பயிற்சி அளித்தார்.

'சிற்பங்களும் படிமங்களும்' என்ற தலைப்பில் சென்னை அரசு அருங்காட்சியக உதவி இயக்குனர் சுந்தரராஜன், 'பாறை ஓவியங்கள்' குறித்து, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மைய செயலர் சுகவன முருகன் விளக்கவுரை ஆற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us