Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு

ADDED : ஜூலை 08, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலையம் சார்பில், தங்களது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என, பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில், செய்ய வேண்டியவை என, அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக, 'சிசிடிவி' கேமரா வைக்க வேண்டும். உறுதியான உட்புறமாக பூட்டும் பூட்டுகளை உபயோகிக்க வேண்டும்.

விசேஷங்களுக்கு செல்லும்போது குறைவான நகைகளை அணியவும். கவரிங் நகைகளை அணிந்து பழகலாம். அதிக நகைகளை அணியும்போது, பாதுகாப்பாக செல்லவும்.

வெளியூர் செல்லும்போது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகளை லாக்கரில் வையுங்கள், பணத்தை வங்கியில் டிபாசிட் செய்யுங்கள் என, கூறப்பட்டுள்ளது.

செய்யக்கூடாதவை என, வெளியில் தொங்கும் பூட்டுகளை கொண்டு வீட்டை பூட்டாதீர்கள். அதிக நகைகளை அணிய நேரிட்டால் தனியாக நடந்து செல்வதை தவிர்க்கவும்.

பணம், நகைகளை வீட்டில் வைக்காதீர்கள் எனவும், மேலும், மாகரல் போலீஸ் நிலைய மொபைல் எண் 94981 00293 என, குறிப்பிடப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us