/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுந்தர விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சுந்தர விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
சுந்தர விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
சுந்தர விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
சுந்தர விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2024 05:47 AM

சேந்தமங்கலம்: காஞ்சிபுரம் அடுத்த, பின்னாவரம் ஊராட்சியில், சேந்தமங்கலம் துணை கிராமம் உள்ளது. இங்கு, சுந்தர விநாயகர் கோவில் மற்றும் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
இதில், வள்ளி தேவசேனா சமேத பாலகிருஷ்ணர், மஹா விஷ்ணு, துர்க்கை ஆகிய பரிவார சன்னிதிகள் உள்ளன.
கடந்த, 5ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று, காலை 6:00 கோ பூஜையும், 9:15 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தன.
காலை, 9:45 மணிக்கு சுந்தர விநாயகர் கோவில் புனித கலசத்தின் மீது சிவாச்சாரியர் புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.