/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு பணி காஞ்சியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு பணி
காஞ்சியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு பணி
காஞ்சியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு பணி
காஞ்சியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு பணி
ADDED : ஜூன் 06, 2024 01:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், 3,00,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை, களக்காட்டூர் ஊராட்சியில் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.
சாலையோரம், நீர்நிலை கரைகளிலும், 1,145 பணி தளத்தில், இந்த 3,00,000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, ஏனாத்துார் கிராமத்தில், வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், 5.41 ஏக்கர் நிலப்பரப்பில், 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியையும், கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் ஜெயகுமார், வன அலுவலர் ரவீமீனா, சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.