/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுங்குவார்சத்திரத்தில் பெயின்ட் கடையில் தீ சுங்குவார்சத்திரத்தில் பெயின்ட் கடையில் தீ
சுங்குவார்சத்திரத்தில் பெயின்ட் கடையில் தீ
சுங்குவார்சத்திரத்தில் பெயின்ட் கடையில் தீ
சுங்குவார்சத்திரத்தில் பெயின்ட் கடையில் தீ
ADDED : ஜூன் 06, 2024 01:34 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட், 47. இவர் அதே பகுதியில், ‛ஆஞ்சிநேயா ஏசியன் பெயின்ட் கலர் வோல்ட்' என்ற பெயரில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை இவரது பெயின்ட் கடையில் இருந்து, கரும்புகை வெளியேறி, திடீரென தீ பிடித்து எரிந்தது. சுங்குவார்சத்திரம் போலீசாருக்கும், ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதற்குள் கடையில் இருந்த பெயின்ட், ரசாயனம் பொருட்களில் தீ வேகமாக பரவி, கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ போல் எரியத் துவங்கியது.
இதையடுத்து, அங்குவந்த ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத் துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜே.சி.பி., வாகனம் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து, கடையில் இருந்த பெயின்ட் பொருட்களை வெளியே அகற்றினர்.
தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்து, அருகில் உள்ள குடியிருப்பு, தனியார் ஏ.டி.எம்., மையத்துக்கு தீயை பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டு வந்து, தீயை அணைத்தனர்.
விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.