ADDED : ஜூலை 16, 2024 01:10 AM
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மேலுார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 29; இவருக்கு சியோன் யுவன்சிலின் என்ற மனைவி மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர்.
இந்த நிலையில், பிரசாந்த், நேற்று முன்தினம், கிறிஸ்துவ கண்டிகையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். இரவு, ஸ்ரீபெரும்புதுார் -- நயப்பாக்கம் சாலையில் நடந்து செல்லும் போது, அதே திசையில் வேகமாக வந்த, 'கேடிஎம்' பைக் மோதியதில், பைக்கை ஓட்டி வந்த இந்திரகுமார், 26, மற்றும் பிரசாந்த் பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வழியாக வந்தவர் இருவரையும் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு, பரிசோதனையில் பிரசாந்த் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்திரகுமார் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.