/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 16, 2024 01:10 AM
காஞ்சிபுரம், தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். . விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
அரசு மூலம் பிறஉதவித் தொகைபெறுவோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியில்லை. அனைத்து தகுதிகள் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், வருமானச் சான்று, மாற்றுச் சான்றிதழ்,கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.