/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு
புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு
புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு
புதிய வகுப்பறை கட்டடங்கள் கிளார் பள்ளியில் திறப்பு
ADDED : ஜூன் 20, 2024 10:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கிளார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 170க்கும் மேற்பட்ட மாணவ- -- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் உள்ள மாணவ- - மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த பெட்ரோவேக் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் சார்பில், ரூ.21 லட்சம் மதிப்பிலான இரு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆர்.ஓ., சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சத்தியமூர்த்தி, புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
கிளார் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் சொர்ணலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவுரி நன்றி கூறினார்.