/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கருவேல மரங்களால் எச்சூர் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் கருவேல மரங்களால் எச்சூர் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கருவேல மரங்களால் எச்சூர் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கருவேல மரங்களால் எச்சூர் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கருவேல மரங்களால் எச்சூர் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 29, 2024 11:06 PM

ஸ்ரீபெரும்புதுார்:எச்சூர் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரத்தின் முட்செடிகளால், இருசக்கர வாகன ஓட்டிகள் கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
எச்சூர் -- மேட்டுப்பாளையம் சாலை வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களில் அதிகம் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள், அதிக அளவில் வளர்ந்துள்ளன.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகம் மற்றும் கண்களை சீமை கருவேல மரத்தின் கூர்மையான முட்கள் பதம் பார்க்கின்றன.
மேலும், இரவு நேரங்களில் செல்லும் போது, எதிர்பாராத விதமாகமுட்செடிகளில் சிக்கி விபத்து ஏற்பட்டு காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டி களுக்கு இடையூறாக, சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.