/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை துவக்கம் வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை துவக்கம்
வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை துவக்கம்
வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை துவக்கம்
வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து சேவை துவக்கம்
ADDED : ஜூன் 29, 2024 10:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், நாகப்பட்டினத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கும் புதிதாக பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ராஜசேகர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் இருந்து, வேளாங்கண்ணிக்கு செல்லும் பேருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, இரவு 9:00 மணிக்கு புறப்படுகிறது.
இப்பேருந்து வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, கடலுார், சீர்காழி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.
இப்பேருந்து திருநள்ளார், சிக்கல், திருவாரூர் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கும் செல்லும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்படுகிறது.
அதேபோல, நாகப்பட்டினத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்து, நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, நாகூர், காரைக்கால், திருக்கடையூர், சீர்காழி, கடலுார், புதுச்சேரி, வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் வந்தடையும்.
இப்பேருந்து திருப்பதி, திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்தலங்களை இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்தாகவும் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.