/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சாலையில் விழுந்த மரக்கிளையை அகற்ற வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:45 PM

ஸ்ரீபெரும்புதுார், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், ஒரகடம் வனப்பகுதியில், சர்வீஸ் சாலையில் தைல மரம் விழுந்துள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சர்வீஸ் சாலையில் விழுந்துள்ள மரக்கிளைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக இதில் மோதி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் விழுந்துள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.