/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சொத்துக்காக தந்தையை கொன்று தலைமறைவான மகன் சிக்கினார் சொத்துக்காக தந்தையை கொன்று தலைமறைவான மகன் சிக்கினார்
சொத்துக்காக தந்தையை கொன்று தலைமறைவான மகன் சிக்கினார்
சொத்துக்காக தந்தையை கொன்று தலைமறைவான மகன் சிக்கினார்
சொத்துக்காக தந்தையை கொன்று தலைமறைவான மகன் சிக்கினார்
ADDED : ஜூலை 16, 2024 11:44 PM

பூந்தமல்லி, சொத்துக்காக, தந்தையை வாகனம் ஏற்றி கொலை செய்து தலைமறைவான, 'பாசக்கார' மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; இவருக்கு மூன்று மகள்கள், வெங்கடேசன், 28, என்ற ஒரு மகன் உள்ளனர்.
தந்தை ராஜேந்திரனுக்கு சொந்தமான வீடு, அதையொட்டியுள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டுள்ளார்.
இதற்கு, மகள்களுக்கும் சேர்ந்து நான்கு பாகமாக பிரித்துக் கொடுப்பதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 10ம் தேதி இரவு, வீட்டின் வெளியே சாலையோரம் நின்றிருந்த தந்தை ராஜேந்திரன் மீது, மினி வேனை ஓட்டிச் சென்று வெங்கடேசன் மோதினார்.
இதில், ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே, வெங்கடேசன் தலைமறைவானார். பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பாரிவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த வெங்கடேசனை, போலீசார் நேற்று மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, தவறி கீழே விழுந்த வெங்கடேசனுக்கு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின், வெங்கடேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.