/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை ரத்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை ரத்து
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை ரத்து
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை ரத்து
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை ரத்து
ADDED : ஜூலை 09, 2024 11:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் மாதம்தோறும் முதல் வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதுாரிலும், இரண்டாவது வியாழக்கிழமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், மூன்றாவது வியாழக்கிழமையன்று உத்திரமேரூரிலும் முகாம் நடைபெற்று வந்தது.
தற்போது, நிர்வாக காரணமாக, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம், நாளை மற்றும் 18ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் முழுதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பங்கேற்று, மருத்துவ படிவம் விண்ணப்பம் பெற்று உரிய அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.