Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

மாணிக்கவாசகர் குரு பூஜை விழா

ADDED : ஜூலை 08, 2024 05:25 AM


Google News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு, ஆனி மக நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகர் குரு பூஜை விழா, நாளை, வெகு விமரிசையாக நடக்க உள்ளது. மாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, திருப்புலிவனத்தில் உள்ள அமிர்தகுஜலாம்பாள் சமேத வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் குருபூஜை விழா நாளை நடக்கிறது.

இதில், நாளை, காலை 8:00 மணிக்கு மாணிக்கவாசகர் திருமேனிக்கு அபிஷேகமும், மலர் அலங்காரம், துாப, தீப பேரொளி வழிபாடு நடக்கிறது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு பொதுமக்களுக்கு நீர்மோர், பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழக சிவபூதகன இசை குடும்பத்தினரின் திருக்கயிலாய வாத்தியம் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us