/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் வாலாஜாபாத் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
வாலாஜாபாத் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
வாலாஜாபாத் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
வாலாஜாபாத் சாலையை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : ஜூலை 08, 2024 05:26 AM
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் - வண்டலுார் வரை, 47 கி.மீ., நான்குவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, 2019ல், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 175.69 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலை நடுவே, மீடியன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரதானகடவுப்பாதைகளில் எச்சரிக்கை தடுப்பு சாதனங்கள் இல்லை.
குறிப்பாக, நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம், அளவூர், வாரணவாசி ஆகிய கடவுப்பாதைகளில் பாதசாரிகள் சாலை கடப்பதற்கும்.
சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடப்பதற்கும், தானியங்கி சிக்னல் அமைக்கவும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் பிரதான கடவுப்பாதைகளை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
உதாரணமாக, தேவரியம்பாக்கம் கிராமம்அருகே, வாலாஜாபாத் -வண்டலுார் ஆறுவழிச் சாலை கடப்பதற்கு, மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
எனவே, பிரதான கடவுப்பாதைகளில், வேகத்தடை, எச்சரிக்கை வர்ணம், தானியங்கி சிக்னல் ஆகியவை அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.