/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பூட்டியே கிடக்கும் மலையாங்குளம் நுாலகம் பூட்டியே கிடக்கும் மலையாங்குளம் நுாலகம்
பூட்டியே கிடக்கும் மலையாங்குளம் நுாலகம்
பூட்டியே கிடக்கும் மலையாங்குளம் நுாலகம்
பூட்டியே கிடக்கும் மலையாங்குளம் நுாலகம்
ADDED : ஜூலை 09, 2024 04:12 AM
உத்திரமேரூர் : மலையாங்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே நுாலகம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாலகம் கட்டப்பட்டது.
பயன்பாட்டிற்கு வந்த புதிதில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இந்த நுாலகம் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:
பராமரிப்பின்மை காரணமாக, பல ஆண்டு களாக பூட்டியே கிடக்கிறது. எனவே நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.