/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் குருப் - 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் காஞ்சியில் குருப் - 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
காஞ்சியில் குருப் - 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
காஞ்சியில் குருப் - 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
காஞ்சியில் குருப் - 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 09, 2024 04:06 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் இயங்கி வருகிறது.
இங்கு, தன்னார்வ பயிலும் வட்டத்தினர், போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
தற்போது, குருப் - -2 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
இதன் துவக்க விழாவிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இலவச பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்.