/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் மாரியம்மனுக்கு வரும் 12ல் கும்பாபிஷேகம் உத்திரமேரூர் மாரியம்மனுக்கு வரும் 12ல் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் மாரியம்மனுக்கு வரும் 12ல் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் மாரியம்மனுக்கு வரும் 12ல் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர் மாரியம்மனுக்கு வரும் 12ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2024 05:23 AM
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பஜார் வீதியில், நடுத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கற்றளி எனும் கருங்கற்களால் புதிய கோவில் அமைக்கப்பட்டு, மேலும் பழனி ஆண்டவருக்கும் கற்கோவில் அமைக்கப்பட்டது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 10ம் தேதி, காலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது.
வரும் 12ம் தேதி, காலை 6:00 மணிக்கு நான்காவது கால யாகசாலை பூஜையும், காலை 8:30 மணிக்கு கலசம் புறப்பாடும், 9:00 மணிக்கு மாரியம்மன், பழனி ஆண்டவர் கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவர் மாரியம்மன், பழனி ஆண்டவருக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும், மஹா தீப ஆராதனையும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன் உட்பட பலர் செய்துள்ளனர்.