/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
ADDED : ஜூலை 08, 2024 05:23 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாகவே மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம், பகலில் கடுமையான வெப்பமும் நிலவுவதால், வாகன ஓட்டிகள், முதியோர், வியாபாரிகள் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் நகர்ப்புறம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது.
உத்திரமேரூர் தாலுகா மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவின் பல கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது.
ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் ஆறாக ஓடியது.