ADDED : ஜூன் 08, 2024 11:18 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம்,கோனேரிகுப்பம் ஊராட்சி, அசோக் நகர், இந்திரா அவென்யூ சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இத்தெருவிற்கு, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், சாதாரண மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.
மேலும், சாலை பள்ளத்தில், பாதசாரிகள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள அசோக் நகர், இந்திரா அவென்யூ தெருவிற்கு புதிதாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.