Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டட முகப்பு புதிய வரைபடம் வெளியீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டட முகப்பு புதிய வரைபடம் வெளியீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டட முகப்பு புதிய வரைபடம் வெளியீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டட முகப்பு புதிய வரைபடம் வெளியீடு

ADDED : ஜூலை 10, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், நெல்லுக்கார தெருவில் இயங்கி வந்த மாநகராட்சி அலுவலக கட்டடம் ஆங்கிலேயே ஆட்சியின்போது, 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மிக பழமையான இக்கட்டடம் இடிக்கப்பபட்டு சகல வசதியுடன்கூடிய புதிய கட்டடம், 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, புதிய மாநகராட்சி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

புதிய மாநகராட்சி கட்டடத்தின் முகப்பு வரைபடம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், சகல வசதியுடன் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தரைதளம் முழுதும் வாகன நிறுத்துமிடமாகவும், முதல் தளம் பொறியாளர் பிரிவு, வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு போன்றவையும், இரண்டாம் தளம் கமிஷனர் அறை, மேயர் அறை, கூட்டரங்கு போன்றவையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டடம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளதாகவும், அடுத்த ஆறு மாதங்களில் கட்டட பணிகள் பெரும்பாலும் முடிவுக்கு வரும் என்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us