/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வேர்க்கடலை சாகுபடி இளநகர் விவசாயிகள் ஆர்வம் வேர்க்கடலை சாகுபடி இளநகர் விவசாயிகள் ஆர்வம்
வேர்க்கடலை சாகுபடி இளநகர் விவசாயிகள் ஆர்வம்
வேர்க்கடலை சாகுபடி இளநகர் விவசாயிகள் ஆர்வம்
வேர்க்கடலை சாகுபடி இளநகர் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 01, 2024 01:13 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நல்ல மண்வளம் மற்றும் நீர்வளம் கொண்டதாக உள்ளதால், விவசாயிகள் முப்போகம் சாகுபடி செய்வது வழக்கம்.
நெல், வாழை போன்ற பயிர் வகைகள் ஒருபுறமும், புன்செய் நிலங்களில் தோட்டப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு சொர்ணவாரி பட்ட சாகுபடியாக அதிக அளவிலான விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர். இந்த வேர்க்கடலை செடிகள், செழுமையாக வளர்ந்து, பார்க்கும் திசையெல்லாம் அப்பகுதியில் பசுமையாக காட்சி அளிக்கிறது.
இளநகர் கிராம விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு இப்பருவத்தில் சாகுபடி செய்த வேர்க்கடலை செடிகளில், நல்ல காய் பிடித்து அதிக மகசூல் கிடைத்தது. இதனால், இந்த ஆண்டுக்கான பருவத்திற்கும் வேர்க்கடலை தேர்வு செய்து பயிரிட்டுள்ளோம்.
அடுத்த பட்டத்திற்கு நெல் அல்லது வேறு சாகுபடி என மாறி, மாறி பயிரிடுவதால், அனைத்து பருவத்திற்கும், அனைத்து வகை பயிர்களிலும் கணிசமான லாபம் ஈட்ட முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.