/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காரப்பேட்டை சாலையில் பள்ளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் காரப்பேட்டை சாலையில் பள்ளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரப்பேட்டை சாலையில் பள்ளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரப்பேட்டை சாலையில் பள்ளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காரப்பேட்டை சாலையில் பள்ளம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2024 11:15 PM

காஞ்சிபுரம்: ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம், காரப்பேட்டை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், காரப்பேட்டை அண்ணா பொறியியல் கல்லுாரிக்கும், அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் இடையே உள்ள பகுதியில், சாலையின் மையப் பகுதியில் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையின் மையப் பகுதி யில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.