/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல் உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
உடைந்த குடிநீர் தொட்டி மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 09:27 PM
வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில், அப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியினரும், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், குடிநீர் தொட்டி நீரை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆறு மாதத்திற்கு முன் குடிநீர் தொட்டி உடைந்தது. இதனால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நல்லுார் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.