ADDED : மார் 13, 2025 10:12 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 29, சரித்திர பதிவேடு குற்றவாளி. ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஒரகடம் போலீசார் சரத்குமாரை, கடந்த பிப்., 13ம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சரத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்காக ஆணையினை வேலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சரத்குமாரை சிறையில் அடைத்தனர்.