Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பசுந்தாள் உர விதை விற்பனை தீவிரம்

பசுந்தாள் உர விதை விற்பனை தீவிரம்

பசுந்தாள் உர விதை விற்பனை தீவிரம்

பசுந்தாள் உர விதை விற்பனை தீவிரம்

ADDED : ஜூலை 15, 2024 02:36 AM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய விவசாயிகள், தங்களது நிலங்களில் தக்கை பூண்டு என்கிற பசுந்தாள் உரம் பயன்படுத்த விரும்பும் பட்சத்தில் அதற்கான விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது,

நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிகமாக மகசூல் பெற பசுந்தாள் உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணின் வளத்தை இழக்காமல் ரசாயன பயன்பாட்டை இது குறைப்பதாக உள்ளது.

தற்போது பசுந்தாள் உரம் என்கிற தக்கைப் பூண்டு விதைகள், முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

அதன்படி, உத்திரமேரூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் இந்த விதைகள் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 1 ஏக்கர் வீதம், 20 கிலோ பசுந்தாள் உரம் விதைகள் வழங்கப்படுகின்றன.

விவசாய நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவற்றை விண்ணப்பித்து கிலோ 99 ரூபாய் 50 பைசா என, கிலோவிற்கு 50 ரூபாய் மானியம் போக, 995 ரூபாய் கொடுத்து 20 கிலோ பசுந்தாள் உரம் விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு பசுந்தாள் உரம் விதைகள் 29,000 கிலோ வினியோக இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 19,000 கிலோ விதைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,000 கிலோ விதை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என, அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us