/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
ADDED : ஜூலை 16, 2024 01:05 AM

முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம் அடுத்த, களியனுார் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 122வது காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு,பள்ளி தலைமை ஆசிரியர்மோகனகாந்தி தலைமை வகித்தார். வாழ்முனி நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகி, முத்தி யால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
களியனுார், ஏரிவாய், வள்ளுவப்பாக்கம் உள்ளிட்ட பல பள்ளியைச் சேர்ந்த, 800 மாணவ - மாணவியருக்கு, இலவச நோட்டு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.
காஞ்சி நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி, சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து ரயில்வே சாலையில் உள்ள பரஞ்சோதியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி, பால்குடம் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
காஞ்சி மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த விழாவில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.