/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'குரூப் - 1' தேர்வுக்கு இலவச பயிற்சி 'குரூப் - 1' தேர்வுக்கு இலவச பயிற்சி
'குரூப் - 1' தேர்வுக்கு இலவச பயிற்சி
'குரூப் - 1' தேர்வுக்கு இலவச பயிற்சி
'குரூப் - 1' தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : ஜூன் 13, 2024 11:48 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 'குரூப் - -1' பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தேர்வுக்கு தயாராகும்தேர்வர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, ஆதார் நகல் ஆகிய விபரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.