/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலிபர் சாவில் துப்பு துலங்கியது போதையில் கொன்ற நால்வர் கைது வாலிபர் சாவில் துப்பு துலங்கியது போதையில் கொன்ற நால்வர் கைது
வாலிபர் சாவில் துப்பு துலங்கியது போதையில் கொன்ற நால்வர் கைது
வாலிபர் சாவில் துப்பு துலங்கியது போதையில் கொன்ற நால்வர் கைது
வாலிபர் சாவில் துப்பு துலங்கியது போதையில் கொன்ற நால்வர் கைது
ADDED : ஜூன் 13, 2024 11:48 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், வெங்குடி அருகே சாலை ஓரம் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, மே மாதம் 5ம் தேதி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், இறந்தவர், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் 30, திருமணமாகாதவர் என்பது தெரிந்தது.
இவர், காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. தினேஷ் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
சம்பவம் நடந்த அன்றைய இரவில், அப்பகுதி 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், காஞ்சிபுரம்- - வாலாஜாபாத் சாலையில், பழைய டாஸ்மாக் கடை எதிரே நான்கு வாலிபர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரம் மறைந்து மறைந்து நடந்து சென்றது 'தெரிந்தது.
அதை கொண்டு தினேஷ் இறப்புக்கும், அந்த வாலிபர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர்கள் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 19, மணிகண்டன், 26 மற்றும் வாலாஜாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன், 25, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன், 25, ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் நால்வரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
சம்பவத்தன்று இரவில் மது அருந்திவிட்டு போதையில் நான்கு பேரும் சாலையில் சுற்றி திரிந்ததாகவும், பண தேவைக்காக அந்த வழியாக வந்த மயிலாடுதுறை மாவட்டம், தினேஷை மடக்கி அவரை தாக்கி, மொபைல்போன், பணம் உள்ளிட்டவைகளை பறித்ததாகவும், தங்களது அடையாளங்கள் குறித்து போலீசாரிடம் சொல்லி விடுவார் என்ற அச்சத்தில், தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, வாலிபர்கள் நான்கு பேரையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்து நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.