/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
நெசவாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 21, 2024 07:01 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாட்டி தோப்பு பகுதியில் உள்ள முருகன் பட்டு நெசவாளர் குடியிருப்பில் நெசவாளர்களுக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துசெல்வம் தலைமையில் நேற்றுநடந்தது.
இதில், கண்புரை அறுவை சிகிச்சைக்கான கண் பரிசோதனை, மாறு கண் பரிசோதனை, கருவிழி கண் பரிசோதனை, கண்ணீர் அழுத்த நோய் சர்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில், முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.