/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 21, 2024 07:00 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநராட்சி மேல்நிலைப் பள்ளி யில் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பள்ளியின் வளர்ச்சி குறித்தும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிப்பது, மாணவர்களின் கல்வித்திறமை மேம்படுத்துவது குறித்து முன்னாள் மாணவர்கள் பலர் ஆலோசனை வழங்கினர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எனவும், பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்க முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் பாண்டியன்,ஆனந்த கிருஷ்ணன் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.