/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 29, 2024 10:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு சார்பில், ஏனாத்துார் சிக்ஷா சி.பி.எஸ்.சி., பப்ளிக் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
உழவர் பூமி அமைப்பின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இயற்கை வழி விவசாயம், கறந்த பாலின் சிறப்பு ஆகியவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன், பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் எம். நிஷாப்ரியா, தோல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி.கே.ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புசங்கத்தைச் சேர்ந்தமாணவர்களுக்கு, பறவை வளர்ப்புக்கான, தேங்காய் நாரில் பின்னப்பட்ட கூடுகள் பெண் மருத்துவர்கள் பிரிவின் சார்பாகவழங்கப்பட்டது.
மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி முதல்வர் ராஜலட்சுமி தலைமையிலான குழு வினர் செய்திருந்தனர்.