/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மேயரை மாற்ற காரணம் கேட்கும் கமிஷனர் உறுதிமொழி பத்திரம் அளித்த கவுன்சிலர்கள் மேயரை மாற்ற காரணம் கேட்கும் கமிஷனர் உறுதிமொழி பத்திரம் அளித்த கவுன்சிலர்கள்
மேயரை மாற்ற காரணம் கேட்கும் கமிஷனர் உறுதிமொழி பத்திரம் அளித்த கவுன்சிலர்கள்
மேயரை மாற்ற காரணம் கேட்கும் கமிஷனர் உறுதிமொழி பத்திரம் அளித்த கவுன்சிலர்கள்
மேயரை மாற்ற காரணம் கேட்கும் கமிஷனர் உறுதிமொழி பத்திரம் அளித்த கவுன்சிலர்கள்
ADDED : ஜூலை 02, 2024 11:46 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கும், கவுன்சிலர்களிடையே எழுந்த அதிருப்தி காரணமாக, கடந்த மாதங்களில், மாநகராட்சி கூட்டத்தை சரிவர நடத்த முடியாமல் போனது.
தி.மு.க., - -அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதும், கூட்டத்தை ஒத்தி வைத்து தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் போனதும் நடந்தது.
லோக்சபா தேர்தல் முடிந்த பின், மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்களிடையேயான பிரச்னை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கடந்த மாதம் 7ம் தேதி, கலெக்டர் கலைச்செல்வியிடம், தி.மு.க., - -அ.தி.மு.க.,- - காங்.,- - சுயேட்., என, 33 பேர் மனு அளித்தனர்.
மேயர் விவகாரம் பெரிதானதால், அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் சமாதானம் செய்தும், கவுன்சிலர்கள் பின் வாங்காமல் தங்கள் முடிவில் திட்டவட்டமாக உள்ளனர்.
கவுன்சிலர்கள் மனு அளித்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில், மாநகராட்சி கூட்டம் இன்னும் நடக்காததால், விரைவாக கூட்டம் நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, மனு அளித்த 33 கவுன்சிலர்களுக்கும் கமிஷனர் செந்தில்முருகன், பதில் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ''கவுன்சிலர்கள் தன்னிடம் மனுவை நேரில் சமர்ப்பிக்கவில்லை என்றும், இரு கவுன்சிலர்களாவது நேரில் மனுவை சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும், மேயரை நீக்க போதுமான காரணங்கள் மனுவில் இல்லை'' எனவும் கமிஷனர் செந்தில்முருகன் பதில் அளித்து உள்ளார்.
அதிர்ச்சியடைந்த அதிருப்தி கவுன்சிலர்கள் 33 பேர் சார்பில், கவுன்சிலர்கள் சிந்தன், கார்த்தி, கமலக்கண்ணன் உள்ளிட்ட ஆறு கவுன்சிலர்கள், உறுதிமொழி பத்திரத்தில் எழுதி, மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கமிஷனர் செந்தில்முருகனிடம் நேற்று மனு அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் சிந்தன் கூறுகையில், 'கமிஷனர் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. நகராட்சி விதிமுறையில் அவ்வாறு எந்த காரணமும் சொல்லவில்லை.
'இருவர் நேரில் வந்து மனு அளிக்க வேண்டும் என்கிறார். இப்போது, 6 பேர் சென்று மனு அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.