/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கொள்முதல் விலை குறைவால் கிலோ ரூ.130க்கு சிக்கன் விற்பனை கொள்முதல் விலை குறைவால் கிலோ ரூ.130க்கு சிக்கன் விற்பனை
கொள்முதல் விலை குறைவால் கிலோ ரூ.130க்கு சிக்கன் விற்பனை
கொள்முதல் விலை குறைவால் கிலோ ரூ.130க்கு சிக்கன் விற்பனை
கொள்முதல் விலை குறைவால் கிலோ ரூ.130க்கு சிக்கன் விற்பனை
ADDED : மார் 11, 2025 10:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் ‛பிராய்லர்' என, அழைக்கப்படும் கறிகோழி, காஞ்சிபுரத்தில் உள்ள சிக்கன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
காஞ்சியில் உள்ள சிக்கன் சென்டர்களில் கடந்த மாதம் கிலோ சிக்கன், 220 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், கிலோவுக்கு 90 ரூபாய் குறைந்து, கிலோ சிக்கன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து செவிலிமேட்டை சேர்ந்த சிக்கன் சென்டர் உரிமையாளர் என்.திருமுகம் கூறியதாவது:
கோடை வெயில் காரணமாக சிக்கன் நுகர்வு குறைந்துள்ளதால், கோழி பண்ணைகளிலும் கொள்முதல் விலை குறைந்துள்ளது.
போதுமான வியாபாரம் இல்லாததால், கிலோ சிக்கன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.