/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண்டல ஹாக்கி போட்டியில் சென்னை அணி 'சாம்பியன்' மண்டல ஹாக்கி போட்டியில் சென்னை அணி 'சாம்பியன்'
மண்டல ஹாக்கி போட்டியில் சென்னை அணி 'சாம்பியன்'
மண்டல ஹாக்கி போட்டியில் சென்னை அணி 'சாம்பியன்'
மண்டல ஹாக்கி போட்டியில் சென்னை அணி 'சாம்பியன்'
ADDED : ஜூலை 21, 2024 07:22 AM
சென்னை : தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், டி.எஸ்.எச்.எல்., எனும் தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்தன. மொத்தம் 306 பள்ளிகள் பங்கேற்றன.
முதற்கட்டமாக மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி, சென்னை மண்டல அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டங்கள், கடந்த மூன்று நாட்கள், சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தன.
இதில், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்கள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், நேற்று மதியம் நடந்த முதல் அரையிறுதியில், சென்னை - ராணிபேட்டை அணிகள் மோதின. அதில், 6 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மற்றொரு அரை இறுதியில், திருவண்ணாமலை அணி, 3 - 1 என்ற கணக்கில், செங்கல்பட்டு அணியை வீழ்த்தி,இறுதிப் போட்டிக்குள்நுழைந்தது. மாலையில் நடந்த இறுதிப் போட்டியில், 2 - 0 என்ற கணக்கில்,சென்னை அணி வெற்றி பெற்று, கோப்பையைவென்றது. செயின்ட் பால்ஸ் பள்ளி அணி, சென்னை அணி யாக களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இடத்தை ராணிபேட்டை கைப்பற்றியது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.ஓ.பி., வங்கியின் டி.ஜி.எம்., திருமுருகன், ஹாக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.