/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாதிரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் மாதிரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மாதிரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மாதிரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
மாதிரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED : ஜூலை 08, 2024 05:24 PM

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள மாதிரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, நேற்று முன்தினம் மாலை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
அதை தொடர்ந்து நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர்கள் விரதமிருந்து, பால் குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக மாதிரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு மாதிரியம்மனுக்கு பெண் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது.
விழாவையொட்டி இன்று காலை, குடம் அலங்காரம் தரிசனமும், மதியம் கூழ்வார்த்தல் விழா நடக்கிறது.