/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 08, 2024 11:22 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.,19ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடந்தது. ஓட்டுப்பதிவு துவங்கிய நாளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை எந்தவித அசம்பாவிதமும், குறைபாடும் இல்லாமல் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதற்கு காரணமானவர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிபுரம் கோட்டாட்சி யர் கலைவாணி தலைமையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில், தேர்தல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால் தான் தேர்தலை சிறப்பாக நடத்த முடிந்தது.
ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் கூட பழுதாகவில்லை. தேர்தல் சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தவர்களுக்கு கோட்டாட்சியர் கலைவாணி நன்றி தெரிவித்தார். தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.