/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வல்லக்கோட்டையில் ஆனி கிருத்திகை விழா வல்லக்கோட்டையில் ஆனி கிருத்திகை விழா
வல்லக்கோட்டையில் ஆனி கிருத்திகை விழா
வல்லக்கோட்டையில் ஆனி கிருத்திகை விழா
வல்லக்கோட்டையில் ஆனி கிருத்திகை விழா
ADDED : ஜூலை 02, 2024 11:31 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், வள்ளி தெய்வானை குங்கும காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
உற்சவர் முருகப்பெருமானுக்கு ரத்னாங்கி அணிவிக்கப்பட்டு, மலர் அலங்கார சேவையில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்திருந்தார்.