/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.42 கோடி ஒதுக்கீடு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 09, 2024 10:26 PM
காஞ்சிபுரம்,:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 20 வளர்ச்சி பணிகளுக்கு 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், திருமங்கை ஆழ்வார் குளக்கரை தெருவில் சிறுபாலம், மழைநீர் வடிகால் அமைப்பது, பக்தவச்சலம் நகர், நுசரத் நகர்.
விநாயகா நகர், அக்சயா கார்டன், ஸ்ரீதேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் மின்விசை தொட்டி அமைக்கப்பட உள்ளது.
மேலும், கோவிந்தமேட்டுத்தெரு, ரெட்டித்தெரு உள்ளிட்ட இடங்களிலும் ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டி அமைக்கப்பட உள்ளது.
மேலும் பல இடங்களில், மழைநீர் வடிகால், சிறுபாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.