/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ களியாம்பூண்டியில் வேளாண் குழு பயிற்சி களியாம்பூண்டியில் வேளாண் குழு பயிற்சி
களியாம்பூண்டியில் வேளாண் குழு பயிற்சி
களியாம்பூண்டியில் வேளாண் குழு பயிற்சி
களியாம்பூண்டியில் வேளாண் குழு பயிற்சி
ADDED : ஜூன் 24, 2024 05:21 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில், தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடந்தது.
இதில், களியாம்பூண்டி, திணையாம்பூண்டி, மேல்பாக்கம், அனுமந்தண்டலம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பலர் பங்கேற்றனர். உழவர் பயிற்சி மைய வேளாண்மை இணை இயக்குனர் சுமதி பங்கேற்று, பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் பயிர்களுக்கான நோய்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வட்டார தொழில்நுட்பம் மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.