/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'கணக்கெடுப்புக்கு பின் கண்டறியபட்டால் நடவடிக்கை' 'கணக்கெடுப்புக்கு பின் கண்டறியபட்டால் நடவடிக்கை'
'கணக்கெடுப்புக்கு பின் கண்டறியபட்டால் நடவடிக்கை'
'கணக்கெடுப்புக்கு பின் கண்டறியபட்டால் நடவடிக்கை'
'கணக்கெடுப்புக்கு பின் கண்டறியபட்டால் நடவடிக்கை'
ADDED : ஜூன் 06, 2024 11:33 PM
காஞ்சிபுரம்:புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட, எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மூலம், இரு ஆண்டுகளில், 14,708 பேர், எழுத்தறிவு கல்வி பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் இணை இயக்குனர் பொன்குமார், படப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது, 'எழுதபடிக்க தெரியாதோர் பற்றி எல்லா குடியிருப்புகளிலும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், கணக்கெடுப்பு முடத்த பின், எவரேனும் கண்டறியபட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு. எனவே, எழுத படிக்க தெரியாத நபர்கள் பற்றி சரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், தொழில்நுட்ப அலுவலர் ரகுராமன், மாவட்ட கல்வி அலுவலர் சொர்ணலட்சுமி, உதவி திட்ட அலுவலர்கள் தனசேகரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.