/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதையில் குளத்தில் விழுந்த வாலிபர் பலி போதையில் குளத்தில் விழுந்த வாலிபர் பலி
போதையில் குளத்தில் விழுந்த வாலிபர் பலி
போதையில் குளத்தில் விழுந்த வாலிபர் பலி
போதையில் குளத்தில் விழுந்த வாலிபர் பலி
ADDED : மார் 13, 2025 10:10 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவலுார்குப்பம், கங்கையம்மன் கோவில் குளத்தில், 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் உடல் மிதப்பதாக, நேற்று காலை, அவ்வழியாக சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், குளத்தில் இருந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரத்தனர்.
விசாரணையில், இறந்தவர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புல்லட் மஞ்சி, 27, என்பதும். மேவலுார்குப்பம் குளக்கரை தெருவில் வாடகைக்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அவர், அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததும். நேற்று முன்தினம் இரவு குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் குளத்தில் தவறி விழுந்ததில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார், முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.