ADDED : ஜூலை 08, 2024 05:34 AM
அச்சிறுபாக்கம்: செய்யூர் அடுத்த மேட்டுப்பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார், 52, அவரின் மனைவி மங்கலலட்சுமி, 46. இருவரும், தொழுப்பேடு அடுத்த இரட்டைமலை சந்திப்பு அருகே, 'ஹோண்டா யுனிகார்ன்' இருசக்கர வாகனத்தில், அச்சிறுபாக்கம் நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, விழுப்புரம்மார்க்கத்தில் இருந்து, சென்னை நோக்கி வந்த, 'சுசுகி எர்டிகா' கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், மங்கலலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சிறுபாக்கம் போலீசார், படுகாயம் அடைந்த குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் நான்கு கி.மீ., துாரம், அச்சிறுபாக்கம் வரை ஓட்டி சென்றுள்ளனர்.
விரட்டி வரும் மக்களை கண்டதும், காரை வெங்கடேசபுரம் நுழைவுவாயில் அருகே நிறுத்திவிட்டு தலைமறைவாகினர்.
அச்சிறுபாக்கம் போலீசார், கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.